முதல் படி அல்லது அடி :
அந்த நாள் மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் இருந்த மாடுகளுக்கு ஒரு கருப்பு நாள். வளரவேண்டிய ஒரு மாடு மேய்ப்பன் (கௌபாய் ) கொல்லப்பட்ட ஒரு நாள். ஊரில் இருக்கும் அணைத்து சொந்தக்களும் பந்தங்களும் சுற்றி நின்று வரவை எதிர்பார்க்க ஜாங்கோ ஜக்கு என்று அழைக்கப்பட்ட நமது ஹீரோவின் என்ட்ரி. சுற்றி இருந்த சொந்தங்கள் "கண்ணு பட போகுதையா சின்ன தம்பியே " என்று பாடி குலுவையிடஅந்த சின்ன தம்பியின் கண்களில் கண்ணீர். ஏன் இந்த கண்ணீர்? ஊரே திரண்டு விடை தேட " நான் பள்ளி கூடம் போலை நான் மாடு மேய்க்க போறேன் . என்னை விட்டுடுங்க என்னை விட்டுடுங்க " என்று நமது ஹீரோ அலற அலற "மயிலாடுதுறையின் ரோல்ல்ஸ் ராய்ஸ் " என்று அழைக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஏற்றப்பட்டார். வண்டி மாடோ நமது ரட்சகன் இனமான காவலன் இப்படி கொடுமை படுத்த படுகிறாரே என்று நடக்க மறுக்க நினைத்தாலும் மதியம் கிடைக்க போகும் வைக்கோலுக்கு சி கு எங்க ஆப்பு வைத்திவிடுவரோ என்ற பயத்தில் மெதுவாக நடந்தது. மற்றது அடுத்த இதழில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment